Thursday 18 October 2012

பராசக்தி…………..,



பராசக்தி…………..,


( தமிழ் நாட்டையே தன் பேனா முனையில் கட்டிப்போட்ட கலைஞரின் வசணம்……………………, வீரப்பன் இற்பதற்கு முன்னால் அவன் நீதிமன்றத்தில் சரணடைந்தால் பொது மண்ணிப்பு வழங்க தயார் என 1996-20 வாக்கிலே ஆட்சியாளர்களாள் கோரிக்கை முன்வைக்கப் பட்டது……, ஒரு வேளை இந்த கோரிக்கையை எற்றுக்கொண்டு வீரப்பன் நீதிமன்றத்தில் சரணடைந்து உரையாற்றி இருந்தால் என்ன பேசி இருப்பான் என்று ஒரு கற்பணையான உரையாடல் இது …………………………)
இனி வீரப்பன்………………..
இந்த நீதிமன்றம் விசித்திரம்  நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கின்றது. புதுமையான மனிதர்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கும் விசித்திரமானது அல்ல. வழக்காளும் நானும் புதுமையான மனிதனும் அல்ல. வாழ்க்கை பாதையிலே சர்வசாதரணமாய் தென்படக் கூடிய ஒரு ஜீவன்தான் நான்…..,
சந்தன மரத்தினை வெட்டினேன்…….., போலிஸ்சாரை தாக்கினேன்…….., குற்றம் சாட்ட பட்டிருக்கிறேன் இப்படி எல்லாம்…….,
நீங்கள் எதிர்பார்கிறிர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப் போகிறேன் என்று…….,
இல்லை……., நிச்சயமாக இல்லை…….,
சந்தன மரத்தினை வெட்டினேன்…….., சந்தனமரம் கூடாது என்பதற்காக அல்ல…….,
சந்தனமரம் போலிஸ்சாரின் கூடாரத்தில் கள்ளத்தனமாக விற்க்கக் கூடாது என்பதற்க்காக……………….,
போலிஸ்சாரை தாக்கினேன்…….., அவன் மக்கள் பணியாளன் என்பதற்காக அல்ல………, காக்கிச் சட்டையை அணிந்து கொண்டு மக்களிடத்திளே கை நீட்டினான் என்பதற்காக…….,
உனக்கேன் இவளவு அக்கறை…….., உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை…….,
நானே பாதிக்கப்பட்டேன்……, நேரடியாக பாதிக்கப்பட்டேன்………,
சுயநலம் அங்கே……., என்  சுயநலத்தில் பொது நலமும் கலந்திருந்தது…….,
ஆகாரத்திற்காக தழைகளை சாப்பிட்டுவிட்டு உழவனின் மலட்டு மண்ணை மறுபிரசவம் செய்கிறதே……, மண்புழ………. அதைப்போல…………..,
என்னை குற்றவாளி என்கிறார்கள்…….,
இந்த குற்றவாளியின் வாழ்க்கையிலே கொஞ்சம் பின்னொகிப் பார்த்தால் அவன் கடந்து வந்த காட்டாறுகள் எவ்வுளவு என்று கணக்கு பார்க்க முடியும்….
ஆர்ப்பறிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில்…….,
படமெடுக்கும் பாம்புகள் நலிந்துதிருக்கின்றன……………….,
தென்றலை தீண்டியது இல்லை நான்……,
காட்டுத்தீயை தாண்டியிருக்கிறேன்……….,
கேளுங்கள் என் கதையை……, தீர்ப்பு எழதுவதற்கு முன் தயவுசெய்து கேளுங்கள்………………..,
தமிழ் நாட்டிலே இந்த சத்திய மங்களத்திலே பிறந்தவன் நான்…., பிறக்க ஒரு இடம்……, பிழைக்க ஒரு இடம்…..,
தமிழ் நாட்டின் தலையெழத்துக்கு நான் மட்டும் என்ன விதி விளக்கா….?
சத்திய மங்களம்……, என்னை வளர்த்தது…….,உயர்ந்தவன் ஆக்கியது……,
அன்றாட தெவைக்காக சுள்ளி பொறுக்கி விற்று அடுப்பேரித்து அரை வயிறு கஞ்சி குடித்தனர் எம் மக்கள்……,
இதோ………, காட்டில் சந்தன மரைங்களை வெட்டி களவாடிய மோசடி வழக்கில் ஈடுபட்டு உங்கள் முன் குற்றவாளியாக நிற்க்கிறானே இந்த காட்டு இலாக்கா அதிகாரி……,
அவன் வலையில் விழந்தவனில் நானும் ஒருவன்…………….,
அவன் நயவஞ்சகப் பேச்சைக் கேட்டேன்….., மதி இழந்தேன்………, மரங்களை
வெட்டினேன்……….,
கடைசியில்தான் தெரிந்தது……, வெட்டிய மரங்கள் கொட்டிய பணங்கள் கவர்மேன்ட் கஜானாவுக்கு செல்லவில்லை…..,   இந்த காட்டு இலாக்கா அதிகாரியின் கைக்கு சென்றது என்று…………..,
மதி தெளிந்து காண்டேன் என் மக்களை…………….., கண்ணற ஒவியமாக……..,
ஆம்….., சுள்ளி பொறுக்க சென்ற எம்கிராமத்து கண்ணிகளின் கற்பை சின்னாபின்னமாக்கியது இந்த காட்டு இலாக்கா போலிஸ்……..,
ஊரின் பெயரோ சத்திய மங்களம்…………., மங்கலகரமான பெயர்…..,ஆனால் ஊரிலோ குடிக்க கால் வயிற்று கஞ்சிக்கு வழியில்லை எம்மக்களுக்கு ……,
செழித்து வாழ்ந்த கிராமம்………, சீரழிந்துவிட்டது….,
கையிலே வேலையில்லை….., கண்ணில் நீர்…., எம்மக்கள் நீதி கேட்டு அலைந்தனர்…., அவர்களுக்காக நானும் அலைந்தேன்…..,
எனக்கு கருனை காட்டியவர்கள் பலர்…….., அவர்களிளே சிலர் கைமாறாக சந்தன மரத்தினை கேட்டனர்…., எம் மக்களுக்கு நீதி கிடைக்க மீண்டும் வேட்டினேன் ……,
கொலை வழக்கிலே சம்மந்தபட்டு இதோ இங்கு கைதியாக நிற்கின்றனே………, இந்த அரசியல்வாதி……………,
இவன் பேச்சால் மயக்க முயன்றான் என் மக்களை…..,
எம் மக்கள் மீதுள்ள வழக்குகளை வாபஸ் வாங்கிவிடுவதாய் சொல்லி ஒட்டு வாங்கியவன்…………., வென்றதும் அவனே எம்மக்களின் மீது பொய் வழக்கு போட்டான்…………….,
நான் அப்போதே தடுத்திராவிட்டால் எம்மக்கள் இவனை அன்றே கொலை செய்திருப்பார்கள்………..,
கடவுள் பக்தர்களும் எம்மக்களை காப்பாற்ற வந்தார்கள்…………..,
பிரதிபலனாக எம் கிராமத்து கண்ணியரின் கடைக்கண் பார்வையை தேடினர்…..,
அவர்களிளே தலைமையானவன் இதோ இந்த பூசாரி…………,
பராசக்தியின் பெயரால்……………..,
உலக மாதவின் பெயரால்……………..,
எம்கிராமத்து மக்கள் இந்த உலகத்தில் புழவாக துடித்தப்படியாவது உயிரோடு இருந்திருபார்கள்………………..,
அவர்களை தற்க்கொலை செய்து கொல்ல தூண்டியது இந்த பூசாரிதான்……………,
எம்மக்கள் தங்களுக்கு வந்த சோதனையை இந்த இரக்கமற்ற உலகத்திற்கு சொல்லிவிட்டு இறக்க விருப்பவில்லை……….., அதனால் அவர்கள் தற்க்கொலை செய்து கொண்டார்கள்………………….,
வாழ விருப்பமில்லாதவர்கள் தற்க்கொலை செய்துகொள்வது விந்தையல்ல…,
உலககின் பெருபாலான நாடுகளை தன் காலடியில் வைத்திருந்த சர்வாதிகாரி, இன்றும் கூட எதிரிகள் உச்சரிக்கப் பயப்படும் ஒரு சானக்கியனின் பெயர்……., ஹிட்லர்……., அவரே கூட போரில் எற்பட்ட தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் மணம் உடைந்து தூக்கு போட்டு தற்க்கொலை செய்து கொண்ட சரித்திரம் உண்டு.
அதே முறையைத்தான் கற்ப்பை காப்பாற்ற கையாண்டு இருக்கிறார்கள் எம்மக்கள்………….., இது எப்படி குற்றமாகும்………………..?
நீதி கெட்டு அலைந்த எனக்கு வாழ நீதி கிடைக்கவில்லை…………,
இந்த சொந்த மண்ணிலே பிறந்த பெண்ணுக்கு வாழ பாதுகாப்பில்லை…………..,
நான் மட்டும் சுயநலத்தோடு கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால்…………..,
கொடீஸ்வரன் வீட்டு பள்ளியறையை போல என் வீட்டை செதுக்கிருப்பேன் சந்தன மரத்தினால்……………..,
மானத்தினை விலை பேசியிருந்தால் மாளிகை வாசியினை என் மடியிலே கிடத்திருப்பேன்…………,
இதைத்தான் இந்த நீதி மன்றம் விரும்புகின்றதா……………?
பகட்டு எம்மக்களை விரட்டியது………………., பயந்தோடினார்கள்,
வழக்கு எம்மக்களை துரத்தியது…………………., மீண்டும் ஒடினார்கள்,
பக்தி எம்மக்களை பயமுறுத்தியது……………….., ஒடினர்……., ஒடினர்……., வாழ்க்கையின் எல்லைக்கே ஒடினர்…..
அந்த ஒட்டத்தினை தடுத்திருக்க வேண்டும்…………………., வாட்டத்தினை போக்கியிருக்க வேண்டும் இன்று சட்டத்தினை நீட்டுவோர்……………….,
செய்தார்களா………………..,?
வாழவிட்டார்களா…………………?
வழக்கறிக்ஞர் : குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்……………..,
இல்லை…., யார் வழக்கிற்கும் இல்லை…………..,
அதுவும் என் வழக்குத்தான்….., என்மக்களின் வழக்கு……………..,என்மக்களின் மானத்தை அழிக்க எண்ணிய மகா பாவிகளுக்கு புத்தி புகட்டுவதிலே இந்த மண்ணின் மைந்தன் நான் ஒடுவதிலே என்ன தவறு…………?
நான் சந்தன மரங்களை கடத்தியது ஒரு குற்றம்………………..,
கண்ணட நடிகர் ராஜ்குமாரை கடத்தியது ஒரு குற்றம்……………..,
காக்கி சட்டை காரர்களை கடத்தி கொன்றது ஒரு குற்றம்………………….,
இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்…………….?
காவிரி விவசாயிகளை கஞ்சிக்க்கு வழியில்லாதவர்களாக அலைய விட்டது யார்க் குற்றம்………………….?
விதியின் குற்றமா…………..? அல்லது தமிழ் நாட்டு நெற்களஞ்சியதிலே வளர்ந்த  அரிசியில் வயிறு வளர்த்து தமிழனுக்கு தண்ணீர் தர மறுக்கும் கண்ணடர்களின் குற்றமா…………….?
ராஜ்குமாரை கடத்தியது குற்றமா………….? இல்லை………….., சொகுசு கட்டிலிலே தவழ்ந்த அவனை காட்டிலே கட்டாந்தரையில் தவழவிட்டு காவிரியிலிருந்து தண்ணீரை வர வைத்தது குற்றமா……………….?
கடவுளின் பெயரால் சீட்டு கம்பேனி போல பெருகிவிட்ட போலி சாமியார்களின் அசிர்மங்களை நாட்டிலே வளர விட்டது யார்க் குற்றம்………………….?
கடவுளின் குற்றமா………….? அல்லது கடவுள் பெயரைச் சொல்லி காமசேபம் நடத்தும் போலி சாமியார்களின் குற்றமா………………..?
இந்த குற்றங்கள் களையப்படும் வரை என்னைப் போன்ற வீரப்பன்களும், எம்மக்களை போன்ற அப்பாவிகளும் கலையப்படுவதில்லை……………………
இதுதான் எங்களின் வாழ்க்கையின் ஏட்டில் எந்த பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்………… .



Wednesday 29 August 2012

வைவாக்கள் தொடர்கதை - PART -2 (இவன புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் ....,!!!)


வைவாக்கள்   தொடர்கதை - PART -2
(இவன  புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் ....,!!!) 


நான் சொல்வதெல்லாம் உண்மை ...., உண்மையை தவிர  வேறோன்றும் இல்லை ....., (இங்கு” நான்” என்று குறிப்பிடுவதுநம்ம” எல்லோரயும்தான் )

கால்நடை பராமரிப்பு மற்றும் மேலாண்மை துறை ......., (LIVESTOCK PRODUCTION AND MANAGEMENT)

ஐந்து வருட படிபில நான்கு வருடங்கள் நம்ம கூடவே வந்து நம்மள காப்பாத்தின ஒரு டிபார்ட்மென்ட்.....,
ரொம்ப கஷ்ட(?) பட்டு படிக்க தேவையில்ல ......,(படிக்கவே தேவையில்லை...!!!)
பிரக்டிகல் கிளாஸ் சீக்கிரம் முடிஞ்சு ரூமுக்கு வந்து ஒரு தூக்கத்தை போடலாம் .....,
50
மாட்டுக்கும், 20 ஆட்டுக்கும் கொட்டகை போட தெரிஞ்சா பாஸ் ...,             
( தெரியாட்டியும் பாஸ் தான்..!!!)

இருந்தாலும் first  இயர் வைவா மட்டும் கொஞ்சம் டேர்ரரா இருக்கும் ...., வைவாவுக்கு போறதுக்கு முன்னாடி ஒவ்வொரு ஸ்டுடேன்ட்டாக stable -கு
( குதிரையின்  இருப்பிடம் )போகணும்....., எல்லாருக்கும் இந்த கேள்வி கண்டிப்பாக இருக்கும் ....,
Restrain the horse with fore limb/hind limb approaches .........? (
குதிரை கால்களை பிடித்து அடக்குவது எப்படி ..?)
இதுக்கு ஒவ்வொரு ஆளா போய் குதிரையின் காலை பிடித்து மடக்கி அடக்க வேண்டும் ......( ஏற்கனவே பிரக்டிகல் கிளாஸ்ல சொல்லிகொடுததுதான்... )
ஆனா… எவன் குதிரைகிட்ட ஓத வாங்குறதுன்னு , கும்பலில் ஒளிஞ்சுக்கிற குருப்ல நானும் ஒருவன் ...,( ஹி..., ஹி ... என்னா சிரிப்பு ….!!! ஓங்கி மிதிச்சா ஒன்ர டன் வெயிட்டுடா......, தாங்குவியா....நீ )
இருந்தாலும் ...., இன்னைக்கு எக்ஸாம் இல்லியா ....,? மார்க் வாங்க எதாச்சம் பண்ணியே ஆகணும் ....?
நமக்கு மட்டும்தான் இன்னக்கி  டர்...., ன்னு  நினச்சேன் .....,ஆனா அப்புறம்தான் தெரிஞ்சுது நம்ம பய புள்ளைங்க எல்லாமே அப்படித்தான்......,
என் முகத்தில் ஒரு ஆயிரம் வோல்ட்ஸ் பல்பு எரிய, என்னை சுற்றி ஒரு ஒளி வட்டம் தெரிய ...... அப்புறம் என்ன ...., ஸ்வீட் எடு .... கொண்டாடு.....!!!

( எல்லாருக்கும் மார்க் போகும் போது....., நமக்கு மட்டும் என்ன கவலை .....) எல்லாம் ஒரு  கமினியுச சிந்தனைதான்.....,

சரி ..., சரி    முதலாவதா  புள்ளையார் சுழிய போட ...., பய புள்ள கிளம்பிட்டான் ( ஓ.... ஒரு தென்றல் புயல்லாகி போகுதே .....)

பத்து நிமிஷம் கழிச்சு பய புள்ள சிரிச்சிகிட்டே உள்ளே வந்தான் ....., சரி , சரி ஊமை குத்து..... என்று எண்ணிக்கொண்டு......, அடுத்தவனை பார்த்தேன் ...., பாவம் பய புள்ள...., குதிரையவே பார்த்து இருக்கமாட்டன் போல ...., முன்னால போய்ட்டு வந்த பய புள்ளைகிட போய் என்னடா பண்ணும்..?கேட்க ....., ஒன்னுமே பண்ண தேவை இல்லை ...., எல்லாம் தானாக நடக்கும்......, என்று மகாபாரதத்தில் கிருஷ்ணன் கொடுத்த அறிவுரையை அள்ளி கொடுக்க...., பய புள்ளையும் போருக்கு புறபிட்டான்.......,

பத்து நிமிஷம் கழிச்சி பய புள்ள சந்தோசமாக , சிரிச்சிகிட்டே வந்தான் ....., அத பார்த்ததும் நமக்கு ஒரு கிளாஸ் தண்ணி குடிச்சா கொஞ்சம் இதமாக இருக்குமேன்னு நினச்சிடேன் ....,

அடுத்த சென்றது ஒரு மாணவி.....,

 நமக்கு ஒரு சந்தோசம்....., கண்டிபாக இவிங்க நமக்கு துணையாக இருப்பார்கள் ......,  என்று  நம்பினேன்...............,  என் நம்பிக்கைல தீய வைக்க......, அதேப்படி......? என் கூட படிச்ச பொண்ணுக எல்லாம் முறத்தாள அடிச்சி புலிய வெரடின பரம்பரையில இருந்து வந்துருப்பாக போல ......, என்னதான் நமக்கு
வெட்கம் , மானம் , சூடு , சொரனைனு ஆயிரம் வந்து தடுத்தாலும் ( என்ன சிரிப்பு ....., first  yearla  அதேலம் நிறையவே இருந்துச்சு ......,)  ஆயிரத்து ஒன்னா நானும் கேட்டுட்டேன் ......, எப்படிமா குதிரையை அடக்குன? அவங்களும் சைகைலேயே சொன்னாக ...... பொறு..., பொறு அப்புறம் சொல்லுறேன் ....., என்று …, (எக்ஸாம் முடிச்சதுக்கு அப்புறம் பதில் தெரிஞ்சா என்ன...., தெரியலைனா என்ன ..? )
சரி.., சரி..,  நாம இதுக்கு மேல கேட்டாக நம்ம வீரத்த சந்தேக (!!?)  பட்டுடூவாங்கலோனு நினச்சி ....., விடுடா...., விடுடானு  ......, இல்லாத மீசையை தடவி கொண்டேன் .....,( first  yearla  மீசை வைக்க கூடாது ......, இது சிநியரோட வாய் மொழி உத்தரவு ........,அப்பதான் first  year பய புள்ளைய கரெக்டா identification  பண்ண முடியுமாம் ......, LPM - கத்துகிட்டத இதுலே கரெக்டா அப்பலே பண்ணுனாங்க......,இருந்தாலும் எங்க காலேஜ் கம்புஸ்ல ஒரு போர்டு தொங்கும் ......, Raging is prohibited in this campus…, யாருமே இல்லாத கடைல யாருக்காக டீ அத்தூறிங்க .....),)
அடுத்ததா ஹிந்திகார பையன் ஒருத்தன் போயிட்டு மின்னல் வேகத்துல வந்தான் ..............., அப்பாடா....., இவன  தூரத்தி விட்டுடாங்கடானு ஒரே சந்தோசம் ......, வைத்ல பால வாத்தான்னு நினச்சு அவனுக்கு ஆறுதல் சொல்லலானு டோன்ட் வொர்ரி....... டா...,நெக்ஸ்ட் எக்ஸாம்ல பாத்துகலாமுனு சொல்ல..... அவன் ஹிந்தில எதோ சொன்னனான்....., அது என்னானு புரியல ...., ஆனாலும்  வைத்தல புளிய கரைக்க ....., என்னடா சொன்னனு கேட்க ....., பய புள்ள சொன்னனான் ...., இது ராஜஸ்தானி மொழின்னு ....., உன்னோட மொழி பற்ற காட்டுறதுக்கு நேரம் காலமே இல்லியாட ....., கடைசி வரையில் நான் கேட்ட கேள்விக்கு பதிலே  சொல்லல....,       அடுத்த ஆளு யாருபானு ? ஒரு சவுண்ட் கேட்க ......, அப்பதான் அந்த ஹிந்திகார பய புள்ள இங்கிலீஷ்ல சொன்னனான் ...., நா வந்ததுலே இருந்து உன்ன போக சொல்லிக்கிட்டு இருக்கேன் ...., இன்னும் நீ போகலியாடனு..?  ஓஹோ ....., அப்ப.... அடுத்த ஆப்பு நமக்குதானு போனேன்.......,
போகும் போதே பல பீலிங்க்ஸ் ...., நம்ம கிட்ட இன்சூரன்ஸ் பாலிசி வேற இல்ல ...., கொல கேசுல குதிரைய கைது செய்து உள்ள வெப்பங்களா..? இல்ல ப்ரீயா சுத்த விட்டூடுவாங்களா...?   shoe  போட்டுட்டு குதிரைய விட வேகமாக ஓட முடியாது ...( இல்லைனா மட்டும் சும்மாவே நாமலாம் ஓடிடாலும்..), எப்பாரண பட்டன் கழட்டி ரெடியா ஓடுவதற்கு வசதியா ......, ஆண்டவா ..., இன்னும் எனக்கு கல்யாணம் கூட ஆகலையே ...., ஏதும் ஏடா கூடாம நடதிட கூடாது ..... ன்னு ஏகப்பட்ட சிந்தனைகளோடு .......,
இடம்: stable
நான் போய் stable  வெளியே நின்னு எட்டி பார்த்தேன் ......,
அந்த professor  கர்சீப்ல முகத்த தொடச்சிக்கிட்டு வெளியே வந்து ........, அட்டண்டரை கூப்பிட்டு....., உள்ள ஒரே புழுக்கமா இருக்குப்பா....., துளசிய (மனிதனை பேர் சொல்லி அழைப்பது போல ஒவ்வொரு குதிரைக்கும் ஒரு பெயர் இருக்கும் .... இந்த குதிரையின் பெயர் - துளசி )
 வெளியே கூட்டிட்டு வா ....., எங்க ....., எனக்கு    அப்பவே தெரிஞ்சிடுச்சு ......, நாம அசிங்க படுவதை ஊரே  கைகொட்டி ரசிச்சு  வேடிக்கை பார்த்து சிரிக்க போகுது ....., எதுதாபுல O & G வார்டு மற்றும் Anatomy  லேப் ....., பக்கத்ல செமன் பேங்க்....,   சைடுல emergency and  critical  care  unit ....., ஆனாலும் ஒரு சந்தோசம் ....., குதிரை நம்மள பார்த்து மிரண்டால்நாமதான் அம்புட்டு அழகு ஆச்சே .....) கால தூக்கி ஒதைகிறதுகுள்ள ....., பின்னாடி திரும்பி பார்க்காம ஓடுனா....., காலேஜ்  கிரௌண்ட் ....., உசிர காபதிக்கலாம்.......,

 துளசிய என் பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தினான் அட்டெண்டென்ட் ....., professor  என்னோட ப்ராக்டிகல் question பேப்பர வாங்கி பார்த்துட்டு ....,hind limb                 ( பின்னங் கால புடிச்சி அடக்கணும் )   அப்ப்ரோச்சா..?  சரி போய் restrain  பண்ணு ...? என்றார் . மறுபடியும் கர்சீப்ல முகத்த தொடைக்க....,நான் நேர பின்னங்காளுகிட்ட போய் நிற்க , துளசி என்ன நினசிசோ தெரியல ...., ஒரு U டன் போட்டு தலைய கொண்டு வந்து எனக்கு நேர நின்னுச்சு...., அத பார்த்த professor , துளசிக்கு நேர  கரெக்டா நிகிறிங்கலே...., குட்...., அப்படியே ப்ரோசீட் பண்ணுக எங்க....., நானும் புதுசா கல்யாணமானவன் தன் மனைவிய கூபிடுற மாதிரி துளசின்னு பேர சொல்ல...., துளசி கரெக்டா தன்னோட லெப்ட் சைடு என்னோட ரைட் சைடு கை நோக்கி வந்து நிற்க ....., நானும் கையை தோல் பட்டையில் வைத்து தடவ...., உடனே professor சீக்கிரம் hind  limb -கு போங்க.. என்று சொல்ல , அதை கேட்ட துளசி ......, ரெண்டு ஸ்டேப் முன்னாடி நகந்து பின்னங்கால் பகுதியை என் கை அருகே கொண்டு வர ....., நானும் கையால் தடவி கொண்டு கிழ்நோக்கி சென்று stifle joint ( முழங்கால் மூட்டு) தொடுவதற்கு முன்பே துளசி தானாகவே காலை தூக்கி, மடக்கி கொள்ள ......, வழக்கம் போல் நானும் கையால் துளசியை  தடவி கொண்டு நிற்க ...., அங்கிருந்த professor  பெர்பெக்ட் ...., சூப்பராக restrain  பண்ணுணிக எங்க ....., இப்படி….., துளசிக்கு தடவி ,தடவி சோப்பு போட்டுதான் மார்க் வாங்கினேன் .....,
எப்படியோ பாதி கிணத்த தாண்டிட்டேன் ....., அடுத்த பாதி ......., நேர வைவாதான்........, சிங்கம் களம் இரங்கிடுச்சு.....,!!!!????

( வைவாக்கள் தொடரும் .....,)